திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் எதிர்பாராதவிதமாக இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தீர்மானித்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காகக் குவியும் சூழலில், திருமலை பகுதியில் தங்கியிருக்கும்போதோ அல்லது தரிசன வரிசையில் நிற்கும்போதோ உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருமலைக்கு வரும் யாத்ரீகர்கள் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இந்த…