கோவையில் ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டம் அறிமுகம்

Spread the love

கே.ஜி. குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான TNCD நிறுவனம் சார்பில், கோவை திருச்சி சாலையில் சிங்காநல்லூர் அருகே ‘கான்சாஸ் சிட்டி’ குடியிருப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
நிறுவனத்தின் 31-வது திட்டமான இதில், 143 வீடுகள் இடம்பெற்றுள்ளன. 1, 2, 3 பிஹெச்கே வீடுகள் மற்றும் வில்லமென்ட் வீடுகள் ரூ.39 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தில் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடம், ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் உள்ளன.
இதுகுறித்து TNCD நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார் கூறுகையில், நவீன வசதிகளுடன் அமைதியான வாழ்க்கைச் சூழலை மலிவான விலையில் வழங்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப ்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *