பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார்

Spread the love

பிரபல சமையல் கலை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமு என்கிற கே. தாமோதரன் (72), உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

சமையல் கலைத் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகப் பிரபலமடைந்தார். குறிப்பாக, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த 2010-ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாகச் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

சமையல் கலைத் துறையில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டி, கடந்த ஆண்டு மத்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு சமையல் கலைத் துறையினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *