தங்கப் பிரியர்களுக்கு செம ஜாக்பாட்! 4 நாட்களில் அதிரடியாய் குறைந்த தங்கம் விலை! 

Spread the love

நகை வாங்கக் காத்திருக்கும் நடுத்தர மக்களுக்கும் பெண்களுக்கும் இது மிகச் சரியான தருணம்! கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,080 வரை சரிந்து பெரும் நிவாரணத்தைக் கொடுத்துள்ளது.

இன்றைய நிலவரம் (அக்டோபர் 23):

  • 1 கிராம் (22 காரட்): ரூ.13,060 (இன்று ரூ.175 குறைந்துள்ளது)

  • 1 சவரன்: ரூ.1,04,480 (இன்று ஒரே நாளில் ரூ.1,400 குறைந்துள்ளது)

மறுபுறம், வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. 1 கிராம் வெள்ளி ரூ.225-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் தங்கம் விலை, பொன்னகைக் கனவுடன் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!