கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 24) மீண்டும் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வெள்ளி விலை சரிந்துள்ளது நடுத்தர மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
-
தங்கம்: 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கும், ஒரு சவரன் ரூ.80 அதிகரித்து ரூ.1,04,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
வெள்ளி: வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.220-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 சரிந்து ரூ.2,20,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.4,000-க்கும் மேல் குறைந்திருந்த நிலையில், இன்றைய திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே சற்றே கவலையை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply