டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார்.
ஹைதராபாத் ஒஸ்மேனியா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குமார் மொலுகரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங் களை வழங்கினார்.
அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஸ்வரன், துணைச் செயல் அலுவலர் முனைவர் மா. நடேசன், டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ. இரா. முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சு.சரவணன் விழா உரையாற்றினார்.
இளங்கலையில் 2,044 பேரும், முதுகலையில் 280 பேரும் என மொத்தம் 2,324 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலும், 10 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் 26-வது பட்டமளிப்பு விழா



Leave a Reply