முகத்தில் இருந்து மூளைக்கு சிக்னல்களை எடுத்துச்செல்லலும் ‘ட்ரைஜீமினல்’ நரம்பு பாதிக்கப்படுவதால், இந்த நோய் உண்டாகுகிறது. இந்த நோய் வந்தால், முகத்தில் காற்று பட்டால்கூட வலி ஏற்படும். தற்கொலையை தூண்டிவிடும் நோய், என இந்த நோயை குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு மனிதர்களுக்கு கொடூரமான வலியை இந்த நோய் கொடுக்கிறது.
முகத்தில் ஏற்படும் இந்த வலி, சிலருக்கு 20 விநாடிகள் இருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு நிமிடம் வரை இருக்கலாம். பல் துலக்க முடியாது, சாப்பிட முடியாது, ஷேவ் செய்ய முடியாது. நாள் ஒன்றுக்கு 10 முறைகூட இந்த வலி வரும். மாத்திரை போட்டாலும், வலி குறையாத நிலை இருக்கும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தால், இந்நோயை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ‘ட்ரைஜீமினல்’ நரம்பு, மூளையில் இருந்து உருவாகி வரும்.
இது, அருகில் உள்ள ரத்தக்குழாய் நரம்பு மேல் ஒட்டிக்கொள்ளும். இந்த அழுத்தம் காரணமாக, ட்ரைஜீமினல் நரம்பு சேதமடைந்து விடும். இதன்காரணமாகவே முகத்தில் கொடிய வலி ஏற்படுகிறது. நரம்பு மேல் ரத்த குழாயின் அழுத்தம் இல்லாமல் இருந்தாலும், இந்த வலி வர வாய்ப்புள்ளது.
இந்த நோயை மருந்து, மாத்திரையால் குணப்படுத்துவது கடினமானது. இதற்கு, ஒரே நிரந்தர தீர்வு – மூளையில் சிறிய அளவில் ஒரு அறுவை சிகிச்சை செய்வதுதான். அறுவை சிகிச்சை செய்து, நரம்பையும், ரத்தக் குழாயையும் பிரித்துவிட்டால், உடனடியாக வலி போய் விடும். அறுவை சிகிச்சை செய்து, மயக்கம் தெளிந்தவுடனே நோயாளிகளுக்கு வலி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும். அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர்களை பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்நோய் பாதிப்பு இருக்கிறவர்கள், முகம் மலர்ந்து, சிரித்து பேச பயப்படுவார்கள். ஆனால், அறுவைசிகிச்சை முடிந்தவுடேனே, நோயாளிகள் முகம் மலர்ந்து சிரிப்பார்கள். அறுவை கிசிச்சை முடிந்து, மூன்றாவது நாளே வீடு திரும்பலாம்.
கே.ஜி மருத்துவமனையில் மாதம் 7 முதல் 8 ட்ரைஜீமினல் நரம்பு பாதிப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பயம் காரணமாக பலரும் டாக்டர்களை அணுக மாட்டார்கள். இது, குணப்படுத்தக்கூடிய நோய்.
உயிருக்கு ஆபத்தானது இல்லை. அடுத்தவர்களுக்கு பரவும் வியாதியும் கிடையாது. முகத்தில் மின்னல் மாதிரி வருகிற வலி, ஆபரேஷனுக்கு பிறகு போயே போய்விடும், என்கிறார் கே.ஜி. மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் சிவசங்கரன்.
‘முகத்தில் ஏற்படும் திடீர் வலிக்கு நிரந்தர தீர்வு’- மூளை, நரம்பியல் நிபுணர் டாக்டர் எஸ்.ராஜ்குமார்

இன்றைய விஞ்ஞான உலகில் நமது வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் உணவு பழக்கவழக்கம் மாற்றம் காரணமாக, மனிதர்களை பலவிதமான, விசித்திரமான நோய்கள் தாக்குகின்றன. அதில், ஒன்றுதான் மின்னல் வெட்டியது போல முகத்தை தாக்கும் வலி. முகத்தில் தோலை தொட்டால் வலி… உணவு சாப்பிட்டால் வலி… பல் துலக்க முடியாத அளவுக்கு வலி… என்று இந்த நோய் மனிதர்களை உயிருடன் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும் அளவுக்கு கொடியது. முகத்தில் இந்த வலி ஒருசில விநாடிகள் நீடிக்கலாம். இந்த நோயை ‘’ட்ரைஜீமினல் நியூரால்ஜியா’’ என்று மருத்துவ துறையில் அழைக்கிறார்கள்.


Leave a Reply