கன்னத்தில் மின்னல் வலியா? (Trigeminal neuralgia) – பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம்

Spread the love
மருத்துவ துறை அனுபவத்தில், அரை சதம் கடந்து, நூறை நோக்கி வெற்றிநடை போடுகிறார் கோவை கே.ஜி. மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம். அவருடன் நடந்த சிறு நேர்காணல் இதோ…

மருத்துவ துறையில் சுமார் 12 ஆண்டுகள் உயர்கல்வி பயின்றேன். சென்னை மருத்துவ கல்லூரியில் (Madras Medical College) மருத்துவ படிப்பை முடித்தேன். பின்னர், அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்தேன். கூடவே, சிறப்பு பயிற்சியும் பெற்றேன்.
1964-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். (MBBS) பட்டமும், 1968-ம் ஆண்டு எம்.எஸ். (MS) பட்டமும் பெற்றேன். அதன்பிறகு 1972-ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிறப்பு பயிற்சியை முடித்துவிட்டு, தந்தை சொல்லை தட்டாமல், தாய்நாட்டு மக்களுக்கு சேவைசெய்ய இந்தியா திரும்பினேன்.
கோவை மாநகரின் மையப்பகுதியில், கே.ஜி. மருத்துவமனையை தொடங்கி, கடந்த 53 ஆண்டுகளாக மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறோம்.
கே.ஜி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை, மூளை மற்றும் நரம்பியல் நோய் சிகிச்சை, சிறுநீரக நோய் சிகிச்சை, கல்லீரல் நோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து, நோயாளிகளை வீடு திரும்ப வைக்கிறோம். அதிநவீன சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கே.ஜி.யில் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும் உள்ளனர். குறிப்பாக, கல்லீரல் நோய்களுக்கான மேம்பட்ட சிகிச்சை முறைகள் கே.ஜி.யில் உள்ளன.
இத்துறையில், நான் பெற்ற அனுபவம் மூலம் சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை அளிப்பதே கே.ஜி.யின் பிரதான இலக்கு.
அடித்தட்டு மக்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதில் கே.ஜி. மருத்துவமனை எப்போதும் முன்னோடியாக திகழ்கிறது. முடிந்தவரை, குறைந்த கட்டணத்தில் பல்வேறு விதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, பார்வையிழந்தவர் களுக்கு, கண் பார்வையை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை தன்னார்வ அமைப்புகள் உதவியு
டன் இலவசமாக மேற்கொள்ளப் படுகிறது. ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல், சமூக பொறுப்புணர்வுடன் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளித்து வருகிறோம்.
பலர், தலைவலி வந்தவுடன் அருகிலுள்ள மருந்து கடைக்கு சென்று ஏதாவது ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிடுகிறார்கள். பின்னர், சரியாகவில்லை… என மனம் நொந்து போகிறார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். தலைவலி ஏற்பட்டால், உடனடியாக கே.ஜி மருத்துவமனையை அணுக வேண்டும். இங்கு, அதற்கான முழு காரணம் அலசி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும். தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
தலைவலிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தீவிர பரிசோதனைக்கு பிறகே என்ன மாதிரியான தலைவரி என தெரியவரும். ‘’மைக்ரேன்’’ என்னும் ஒற்றை தலைவலி பாடாய் படுத்திவிடும். மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு (Depression) போன்ற உளவியல் காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு, முகத்தில் மின்னல் தாக்கியது போன்ற கடுமையான வலி ஏற்படாலாம். இவை எல்லாவற்றுக்கும் கே.ஜி.யில் தீர்வு உள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 500 பேருக்கு இந்த வகை Trigeminal Neuralgia நோய் வருகிறது. இந்த வியாதி யாருக்கு வேண்டுமானாலும் வரும்.
தலைவலி வர காரணம் என்ன?
அடுத்து, ‘‘சைனஸ் அழற்சி’’ (Sinusitis). இதுவும் தலைவலியை உண்டாக்கும். நெற்றி மற்றும் முகம் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். கண்களின் உட்பகுதியில் அழுத்தம் அதிகரித்து ‘’கிளாக்கோமா’’ (Glaucoma) பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கடுமையான தலைவலி ஏற்படும்.
இதேபோல், brain tumour என்னும் மூளையில் கட்டி, பெரும் தொந்தரவு கொடுக்கும். இது, சாதாரண கட்டியா? அல்லது கேன்சர் கட்டியா என்று ஆராய்ந்து, அதற்கு ஏற்ப தரமான சிகிச்சை அளிக்கப்படும்.
தலையில் இருந்து முகத்திற்கு 12 நரம்புகள் இறங்குகின்றன.
அதில் 5வது நரம்பின் பெயர் Trigeminal Nerve. இந்த நரம்பை சுற்றி ரத்த குழாய் இருக்கிறது. அது, அழுத்தம் கொடுத்தால் முகத்தில் மின்னல் போன்ற வலி இருக்கும். ஏதாவது உணவு சாப்பிட்டாலோ, தண்ணீர் குடித்தாலோ வலி ஏற்படும். சாதாரண xray எடுத்து பார்த்தால் இதன் பாதிப்பு பற்றி அறிய முடியாது. MRI ஸ்கேன் எடுத்து பார்த்தால் மட்டுமே முழுமையான பாதிப்பு தெரியவரும்.
கே.ஜி மருத்துவமனையில் MRI ஸ்பெஷலிஸ்ட் ராஜ் கீர்த்தி இருக்கிறார். இவர், இத்துறையில் அசாத்திய திறமை கொண்டவர். முகத்தில் மின்னல் போன்ற வலி இருப்பவர்கள் இவ்வகை ஸ்கேன் கண்டிப்பாக எடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப தீர்வு அளிக்கலாம். கே.ஜி. மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் சிறந்த அனுபவசாலி. இதுபோன்ற பல மருத்துவ நிபுணர்கள் கே.ஜி.யில் உள்ளனர். வாழ்க்கையில் எந்த பிரச்னையாக இருந்தாலும், ‘பீல்’ பன்றதைவிட ‘டீல்’ பன்றதே சிறந்தது. வாழ்வில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி, சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டுமென்றால் உன்னை சுற்றியிருப்பவர்களை நேசி.
வெற்றி வசப்படும். ஜெய்ஹிந்த்…!