இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
” கோவையை அடுத்த மதுக்கரையில் தொடங்கி மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில் 81 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு புறவழிச்சாலை உருவாக்க சாத்தியக்கூறு ஆராய்ந்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டம் அமைக்கப்பட்டால், விவசாயிகள், பொறியியல்துறை, ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயனடையும். இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தயாரித்த விரிவான திட்ட அறிக்கை, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் கைவிடப்பட்டுள்ளது.
கோவை முதல் கரூர் வரையிலான பசுமை வழிச்சாலை திட்டம், மற்றும் கிழக்கு புறவழிசாலை திட்டம் ஆகிய இரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால், கோவை,திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு மாவட்ட மக்கள் , தொழில்துறையினர் பயனடைவார்கள். தற்போது, கோவை – கரூர் பசுமைவழி சாலை திட்டத்துக்கு மட்டும் முக்கியத்தும் கொடுத்து விட்டு, கோவை கிழக்கு புறவழி சாலை திட்டத்தை கைவிடுவது, மேற்கண்ட மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை கவனத்தில் கொண்டு, கொங்கு மக்களுக்கு மிகவும் பயனுள்ள கோவை கிழக்கு புறவழி சாலை திட்டத்தை தனித்திட்டமாக நிறைவேற்ற மத்திய சாலைகள் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழக அரசு, உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply