ஆதாரில் முகவரி மாற்ற சான்று இல்லையா? இதோ எளிய வழி!

Spread the love
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு வழக்கமான முகவரிச் சான்றுகள் இல்லாதவர்களுக்காகப் புதிய மற்றும் எளிய நடைமுறையை தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கி வருகிறது. பொதுவாக பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்கள் அல்லது மின்சாரம், தண்ணீர், போஸ்ட்பெய்ட் மொபைல், பிராட்பேண்ட் கட்டண ரசீதுகள் மூலம் முகவரியைப் புதுப்பிக்க முடியும்.
ஆனால், இந்த ஆவணங்கள் எதுவுமே இல்லாத பட்சத்தில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை. மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் ‘புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்’ மூலமாகவும் முகவரியை மாற்றிக் கொள்ள முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் (MP), சட்டமன்ற உறுப்பினர் (MLA), அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி (Gazetted Officer) அல்லது தாசில்தார் (Tehsildar) ஆகியோரிடம் இந்தச் சான்றிதழைப் பெறலாம்.

குறிப்பிட்ட அதிகாரியின் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் (Letterhead) விண்ணப்பதாரரின் பெயர், தற்போதைய முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், அதில் அந்த அதிகாரியின் கையொப்பம் மற்றும் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி எவ்வித தடங்கலுமின்றி உங்கள் ஆதார் முகவரியை மிக எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *