பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு, ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் டி. மகேஷ்குமார், பள்ளி முதல்வர் டாக்டர் டயானா ஐ மற்றும் அறக்கட்டளையின் பொது தொடர்புத் துறை பொது மேலாளர் டாக்டர் பிரகதீஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதிநாடகத்தை அரங்கேற்றினர். மேலும், ரேஸ் கோர்ஸ் பகுதியில் பேரணி நடத்தி, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, பொது மக்களுக்கு காகித மற்றும் துணிப் பைகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் இல்லா சமூகத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள்



Leave a Reply