இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023-ல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் அதிகாரியின் மகனைக் காப்பாற்றும் முயற்சிகளை மையமாக வைத்து உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்ட கதைக்களம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முத்துவேல் பாண்டியன் எதிர்கொள்ளும் புதிய பிரச்னைகளை மையமாகக் கொண்டு ‘ஜெயிலர் 2’ உருவாக்கப்பட்டு வருகிறது. மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் மீண்டும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகவும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இப்படத்தில் விருந்தினர் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்தின் ஏற்கெனவே பிரபலமான ‘முத்துவேல் பாண்டியன்’ கதாபாத்திரம் மீண்டும் திரையில் வர இருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



Leave a Reply