கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில நாட்களாகக் குரங்குகள் கூட்டம் கூட்டமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. தினந்தோறும் பல்வேறு மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இந்த அலுவலகம் விளங்கும் நிலையில், அங்கு குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், குரங்குகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து அருகே செல்ல வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன், உடனடியாகக் கூண்டு வைத்து குரங்குகளைப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply