25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி…. கோவையில் பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை!

Spread the love

பாரத பிரதமர் நரேந்திரமோடி அயராத உழைப்பு, அபாரமான உறுதிப்பாடு, மற்றும் தேசத்தையே வாழ்வின் முதன்மை இலக்காகக் கொண்ட தனது 25 ஆண்டுகால சேவையையும் அர்ப்பணிப்பையும் நிறைவுசெய்தும் இதே நாளில், 2001 அக்டோபர் 7 அன்று, மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்று அன்று முதல், முதலமைச்சர் மற்றும் பிரதமராக அவரது தொடர்ச்சியான சேவை, போராட்டம் மற்றும் அர்ப்பணிப்புப் பயணம், ஏழைகளின் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சேவையை பாராட்டி இன்று நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை ஜோதி பேரணி நடைபெறுகிறது.

இதனையொட்டி கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி பேரணி துடியலூரில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம் எல் ஏ வானதிசீனிவாசன், கனகசபாவதி, மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், மற்றும் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் மற்றும் தொண்டர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் சிறப்பு விருந்தினர்கள் ஜோதியை ஏற்றிவைத்தனர். இப்பேரணி மேட்டுப்பாளையம் சாலை விஸ்வநாதபுரத்தில் தொடங்கி துடியலூர் வரை நடைபெற்றது.

முன்னதாக அரசியல் வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றியதை எல் இ டி திரை அமைத்து பார்வயிட்டனர். தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொது செயலாளர் மதன் மோகன், மாவட்ட துணைத் தலைவர் தாமு, இளைஞர் அணி மாநில செயலாளர் கிருஷ்ண பிரசாத், விவசாய அணி மாவட்டத் தலைவர் ஜெயசேகர், இளைஞரணி மாவட்ட தலைவர் முத்து அபிஷேக், இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் பிரனேஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் 2047 ல் இந்தியா உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா உலகின் தனிப்பட்ட சக்தியாக திகழ்கிறது. உள்பட தனது அனுபவங்களை கூறினார். இதனை நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் கண்டுகளித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *