‘நிம்மதி முக்கியம்’- ஆண்டுக்கு 32 லட்சம் சம்பளத்தை துறந்த ஐ.டி ஊழியர்

Spread the love

சமீபத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் ஒருவர், இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஆட்டோ ஒட்டும் செய்தி பற்றி கேள்விபட்டோம். தற்போது, ஆட்டோ ஓட்டி மாதம் 60 ஆயிரம் சம்பாதிப்பதாகவும் முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக அந்த பெண் பேட்டியளித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் வெகு வேகமாக பரவியது. இந்த நிலையில், ஆண்டுக்கு 32 லட்சம் சம்பளம் கொண்ட ஐ.டி வேலையை ஐ.ஐ.டியில் படித்த ஸ்னேகப்பிரியா என்பவர் நிராகரித்துள்ளார்.

பெங்களுருவைச் சேர்ந்த ஸ்னேகப்பிரியா கூறியதாவது, ” என்னை பொறுத்த வரை, அதிக ஊதியத்தை விட மன அமைதிக்கே முன்னுரிமை கொடுக்கிறேன். குர்கானுக்குக் குடிபெயர்வதற்குப் பதிலாக பெங்களூருவிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த  நகரத்தின் அன்பான சூழல், பாதுகாப்பு உணர்வு மற்றும் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வு சிறந்த வேலைவாய்ப்பை விடவும் முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. டெல்லி-என்சிஆர் பகுதிக்கு இதற்கு முன்பு நான் சென்ற போது, எனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், கவர்ச்சிகரமான சம்பளத்தை விட, எனக்கு அங்கு குடியேற தயக்கம் இருக்கிறது.  ஐஐடி ரூர்க்கியில் படித்துக்கொண்டிருந்தபோது டெல்லிக்கு சில பயணங்களை மேற்கொண்டுள்ளேன். எனக்கு, மிகுந்த தயக்கத்தையும் கவலையையும் அந்த பயண அனுபவம் தந்தது. ஆனால், பெங்களூரில் அன்பும் கனிவும் கொட்டிக் கிடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.