ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 20-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ப்பட்டன.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் விழா விற்கு தலைமை தாங்கி, பட்டதாரிகள் அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அதை சமூக முன்னேற் றத்திற்கும் புதுமைக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், நன்றியுணர்வு, குடும்ப மதிப்புகள் மற்றும் முழுமையான வெற்றியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக வி.எல்.எஸ்.ஐ. சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் முனைவர் சத்ய குப்தா கலந்து கொண்டு, இந்தியாவின் செமி கண்டக்டர் துறையின் வளர்ச்சி, உள்நாட்டு தொழில்நுட்ப உற்பத்தியின் அவசியம் மற்றும் 2047-க்குள் இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப வல்லரசாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்கு குறித்து பேசினார்.
புதுமைகளை உருவாக்கி, ‘விக்சித் பாரத்’ இலக்கை அடைய பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
விழாவில் பேரா சிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு பட்டதாரி மாணவர்களின் சாதனை களை பாராட்டினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 20-ஆவது பட்டமளிப்பு விழா



Leave a Reply