நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோவையில் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Spread the love

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் மனஅழுத்தத்தை கருத்தில் கொண்டு, தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர குமார், எஸ்.எம்.எஸ் தலைவர் ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாகரன், தமிழ்ச்செல்வன், ராமநாகராஜ், குணசேகரன், ஜெர்ரி லூயிஸ், பாசமலர் சண்முகம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜாமணி, கே. ஆறுமுகம், ஜி.கே. ஆரோக்கிய ராஜ், சிவ ஐயப்பன், கே.ஆர். தாமஸ், கணேசன், கார்த்திக், பறக்குப்படை ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

“மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வு முறையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.