கோவையில் பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா – “ஆலம் விழுதுகள்” அமைப்பின் புதிய முயற்§

Spread the love

 

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஹெர்க்லி ஸ்போர்ட்ஸ் சென்டர்-இல் இன்று பிரம்மாண்டமான விளையாட்டுத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

 

“ஆலம் விழுதுகள்” எனும் ஆலம் விழுதுகள் அமைப்பு முன்னெடுப்பில் நடைபெறும் இந்த “ஸ்போர்ட்ஸ் கார்னிவல்” ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் ஆர்வம் ஆகிய மூன்று முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

“ஒரே அணி, ஒரே உணர்வு, முடிவில்லா நினைவுகள்” என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கிய இந்த விழாவில் கிரிக்கெட், பூப்பந்து (Badminton), மேசைப்பந்து (Table Tennis) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அணிகள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர்.

 

விழா நடைபெறும் பீளமேடு பகுதி இன்று முழுவதும் விளையாட்டு உற்சாகத்தால் நிரம்பியுள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து போட்டிகளை கண்டு களிக்கின்றனர்.

 

ஆரோக்கியமான போட்டி மனப்பாங்கை வளர்த்து, இளைய தலைமுறையினரிடையே ஒற்றுமை மற்றும் குழு உணர்வை ஊக்குவிப்பதே இந்த கார்னிவலின் முக்கிய நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த விளையாட்டுத் திருவிழா வரும் நாட்களிலும் பல்வேறு போட்டிகளுடன் தொடரும் எனவும், வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்

பட்டுள்ளது.