கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“இது போன்ற முக்கிய வழக்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை ஐ.ஜி அளவில் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னையில் உள்ளதைப் போல கோவையிலும் மருத்துவ பரிசோதனைகளுக்கான டி.என்.ஏ ஆய்வகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கோவை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் நான்கு மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோல் இந்த வழக்கிலும் விரைவாக விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றார்.
வழக்கின் விசாரணை தாமதமின்றி நடைபெற காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் பொன்மாணிக்கவேல் வலியுறுத்தினார்.



Leave a Reply