இந்து இளைஞர் முன்னணி சார்பில் கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.
இந்து இளைஞர் முன்னணி கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.அஜித்குமார் தலைமையில் வழங்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை ஆண், பெண் பள்ளிகள் என ஆயிரத்து இருநூற்று பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், பல தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிப்பறை வசதி இல்லாத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல அரசு பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், உயர்நிலைப் பள்ளிகளில் கணினி, வேதியியல், இயற்பியல் ஆய்வு கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்றும், அரசு சார்பில் பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு வழங்கும் நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் சூர்யா, பிரசாந்த், மதன், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு



Leave a Reply