கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர்கள்

Spread the love
கோவையில், கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்களும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன.

பாஜக மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டர்கள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவை சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனால் கோவை அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *