கலைஞரின் 103-வது பிறந்தநாள் கோவை திமுக அலுவலகத்தில் மலரஞ்சலி

Spread the love

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது அரசியல், சமூக மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன.
நிகழ்ச்சியில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கல்பனா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மெட்டல் கண்ணப்பன், பாலசுப்பிரமணியன், சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எம். தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் முமசா முருகன், மணிகண்டன், சரஸ்வதி, கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும், எல்.பி.எப். தமிழ்ச்செல்வன், பகுதி கழகச் செயலாளர்கள் சிங்கை சிவா, மார்க்கெட் மனோகரன், மா. நாகராஜ், கண்ணன், சேதுராமன், டெம்போ சிவா, பத்ருதீன், சிவகுமரன், சிவகுமார், மோகன்ராஜ், தலைமை கழகப் பேச்சாளர் கோவை சம்பத், அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அன்புசெழியன், அன்னம்மாள், பாபு, கனிமொழி, துரை கதிரவன், சுரேஷ், அக்ரிபாலு, வழக்கறிஞர் ஜி.டி. ராஜேந்திரன், மரகதம், எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகி அப்பாவு, அலுவலகப் பொறுப்பாளர் ஆர்.எஸ்.புரம் பூபாலன், சாரமேடு இஸ்மாயில், மு. சந்திரசேகர், பாலசந்திரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.