எந்த சூழ்நிலையிலும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் – முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேச்சு

Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாகவும், சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி
வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி 93316 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து
மாதம்பட்டி ஒன்றியம் தென்கரை பேரூராட்சி கரடிமடையில் உள்ள அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் கொண்டு
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி அறிவிப்பு பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் நன்றி தெரிவித்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி.
எந்த சூழ்நிலையிலும் உங்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
தமிழகத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் தொடர்ந்து எனக்காக வாக்களித்து வெற்றி பெற வைத்த உங்கள் அனைவரையும்
உயிருள்ள வரை மறக்கமாட்டேன்.” என்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி. வேலுமணி பேசினார்.
தொடர்ந்து
தென்கரை பேரூராட்சி
வன்னியர் காலனி, மத்திபாளையம், சென்னனூர், கிருஷ்ணாபுரம் புதூர் மற்றும் பூலுவபட்டி பேரூராட்சி மோளபாளையம், வடிவேலாம்பாளையம், பூலுவபட்டி, உரிப்பள்ளம்புதூர், சீனிவாசபுரம் ஹைஸ்கூல், முகாசிமங்கலம், காளிமங்கலம், நாதேகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதியாக
கிளிய கவுண்டன் பாளையம்,
கள்ளிப்பாளையம் (சீனிவாசபுரம்) ஆக இடங்களில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அதிமுக மாவட்டக் துணைச் செயலாளர் என். கே.செல்வத்துரை, மாவட்டக் இணைச் செயலாளர் எஸ். மணிமேகலை, மாவட்ட பொருளாளர் என்.எஸ். கருப்புசாமி, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ஜி.கே.விஜயகுமார்,
ஒன்றிய செயலாளர்கள் டிபி வேலுச்சாமி, டி.சக்திவேல், ராஜா என்கிற ராமமூர்த்தி மற்றும் சார்பணி மாவட்ட செயலாளர்கள் , மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *