கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபரும் த.வெ.க. தொண்டருமான உமா மகேஷ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி அப்பகுதியில் பயணம் செய்த பொதுமக்கள், வழிப்போக்கர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி அசைவ விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உமா மகேஷ்வரி, “பசி என்ற கொடுமையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது முதலமைச்சர் விஜய் அவர்களின் உயர்ந்த நோக்கம். அதனை முன்னெடுக்கும் முயற்சியாக இந்த அன்னதான சேவையை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “முதியோர், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கு அன்னதானம் வழங்கியபோது மிகுந்த மனநிறைவு ஏற்பட்டது. குறிப்பாக பழங்குடியினர் வாழும் மலைப்பகுதியில் இந்த சேவையை மேற்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், “இன்றைய தினம் மட்டுமல்லாமல், வருங்காலங்களிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். பசி இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் தளபதி விஜய் அவர்களின் உயர்ந்த நோக்கத்திற்கு என்றும் துணைநின்று செயல்படுவேன்” என்றும் தெரிவித்தார்.



Leave a Reply