பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் ஏழை, எளிய மக்களுக்கு “குர்பானி” எனப்படும் ஆட்டிறைச்சி வழங்குவதுடன், தங்களால் இயன்ற உதவிகளையும் தானங்களாக வழங்குவது வழக்கம். மேலும், சிறப்பு தொழுகைகளும் நடைபெறும்.
அதன்படி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தொழுகை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை திரளாக கலந்து கொண்டு, மக்கள் நலமுடன் வாழ வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பும் மனிதநேயமும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.
மேலும், நேற்று ஜாக் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply