தங்கம் பிரியர்களுக்கு அதிர்ச்சி… ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை!

Spread the love
நேற்று சற்றே குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதி அளித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோரைத் கவலை அடையச் செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி (நவம்பர் 7), 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,07,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை விட வெள்ளியின் விலை நம்ப முடியாத அளவுக்குப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.45 அதிகரித்து ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரே நாளில் ரூ.45,000 வரை உயர்ந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகி வருவது சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தின் இறுதி நாளான இன்று விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் நகை பிரியர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.