,

பசுமைப் புரட்சி நாயகன் சி.சுப்பிரமணியம் நினைவேந்தல்: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி!

Spread the love

பசுமைப் புரட்சியின் நாயகன் சி. சுப்பிரமணியம் அவர்களின் 26-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிலை பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.என். கந்தசாமி, கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ரங்கராஜன் மற்றும் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபாலன், கோவை செல்வன், திருமூர்த்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சௌந்தர் குமார், சங்கர், மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் கருணாகரன், பாஸ்கரன், பாசமலர் சண்முகம், ரங்கநாதன், ராயல் மணி, ராஜமாணிக்கம் ஆகியோருடன் ஜி.கே. ராகவன், பிரபு, பறக்கும் படை ராஜ்குமார், ராஜா, பழனிசாமி, வின்சென்ட், மணிகண்டன், ரங்கராஜ், வி.கே.எல். கிருஷ்ணன், வி.கே. சுப்ரமணி, காளிமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.