“தெளிவையும் ஞானத்தையும் நோக்கிப் பயணப்போம்”: சத்குருவின் தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி! 

Spread the love

கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தீபாவளித் திருநாளை முன்னிட்டு மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:

“நம்மைச் சுற்றியுள்ள வெளிப்புற உலகத்தில் ‘இருள்’ என்பது வெளிச்சம் இல்லாமல் இருப்பது. ஆனால், நமது உள்நிலையில் இருள் என்பது ‘தெளிவில்லாமல்’ இருப்பதுதான். எனவே, இந்த தீபாவளித் திருநாள் நம் சூழலில் ஏற்றப்படும் தீபங்களின் விழாவாக மட்டும் அமைந்துவிடாமல், நம் அகத்தில் தெளிவின் உச்சமான ஞானத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒரு சிறந்த தொடக்கமாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்புற ஒளியைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்கள் தங்களுடைய உள்மன அமைதியையும் தெளிவையும் அடைய இத்தீபாவளி நன்னாள் வழிவகுக்கட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.