தீபாவளி என்றாலே பட்டாசு இல்லாத பண்டிகையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம். அப்படிப் பட்டாசு வெடிக்கும்போது, கண்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை வாசன் கண் மருத்துவமனை (Vasan Eye Care) தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பட்டாசு வெடிப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அனைத்து வாசன் கண் மருத்துவமனைகளிலும் முதலுதவி உட்பட முக்கியச் சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் காயம் மற்றும் பட்டாசு மருந்துகளால் கண்களில் உண்டாகும் அழற்சி என அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசச் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காகத் தீபாவளி நாளன்றும் வாசன் கண் மருத்துவமனை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியாளர் சந்திப்பு மருத்துவர் B. மல்லிகார்ஜுனன் [Dr. B. Mallikarjunan] மற்றும் மருத்துவர் கோகுலப் பிரியா குணசேகரன் [Dr. Gokulapriya Gunasekaran] ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை மேலாளர் சுந்தரபாண்டியன் [Sundara Pandian] உடனிருந்தார்.



Leave a Reply