கோவை நஞ்சேகவுண்டன்புதூர் மயானத்தில் குப்பை மாற்று நிலையமா?

Spread the love

பல ஆண்டுகளாக இந்து மக்களின் இறுதிச்சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் நஞ்சேகவுண்டன்புதூர் மயானத்தில், 200 டப்ட் திறன் கொண்ட கழிவு மாற்று நிலையம் அமைக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என இந்துமுன்னணி அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவைத்துடியலூர் நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் மயானத்தில் குப்பைகளைப் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகவும் அதன் அடிபப்டையில் மேலும், தற்போது நடைபெறும் பணிகளின்போது புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகள் வெளியே வந்ததாகவும், இதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மயானத்திலும் கழிவு மாற்று நிலையம் அமைப்பதால் துர்நாற்றம், கொசு–ஈ தொல்லை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்தில் கழிவு மாற்று நிலையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.