கோவை இந்திய தொழில் வர்த்தக சபை புதிய தலைவராக சி.துரைராஜ் தேர்வு

Spread the love

கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் 92-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைப்பின் 2026–2028ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பிரபல ‘பழமுதிர் நிலையம்’ நிறுவனத்தின் உரிமையாளர் சி.துரைராஜ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அமைப்பில் நீண்டகால அனுபவம் கொண்ட சி.துரைராஜ் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே தொழில் வர்த்தக சபையில் பொருளாளர் (2016–2020), கௌரவச் செயலாளர் (2020–2022) மற்றும் துணைத் தலைவர் (2022–2026) உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வெற்றிகரமாக வகித்துள்ளார். மேலும், தமிழக அரசின் பல சிறப்புக் குழுக்களிலும் வர்த்தக சபையின் பிரதிநிதியாக இவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தின் தொடக்கமாக, உடனடி முன்னாள் தலைவர் ராஜேஷ் லுண்ட் 2025–2026ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், கோவை மாநகரின் வர்த்தக மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *