பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் மிகத் தீவிரமடைந்து வருவதாகவும், இது வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 100% நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு (WMO) அதிர வைக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றிலேயே, ஒரு காலநிலை நிகழ்வு குறித்து இவ்வளவு உறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2°C வரை அதிகரித்துள்ளதால், உலகின் சில நாடுகளில் கடும் வறட்சியும் தீவிர வெப்ப அலைகளும் வீசக்கூடும்; அதேவேளையில், பிற பகுதிகளில் அதிகப்படியான மழைப்பொழிவால் பேய் வெள்ளம் சூழும் ஆபத்தும் நிலவுகிறது.
குறிப்பாக, இந்தியாவில் இந்த எல் நினோ தாக்கத்தால் வழக்கமான பருவமழை அளவில் மாறுதல்கள் ஏற்பட்டு, குளிர்காலத்தின் வெப்பமும் வழக்கத்தை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயச் சாகுபடி, வேளாண் மகசூல் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால், உலக நாடுகள் அனைத்தும் தங்களது அவசரக்கால பேரிடர் மேலாண்மைத் திட்டங்களையும், குடிநீர் மற்றும் விவசாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக முடுக்கிவிடுமாறு உலக வானிலை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



Leave a Reply