ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு!

Spread the love

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5.25 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22 மற்றும் 23-ம் தேதிகளில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் கொடுங்காயமடைந்தனர்.

இதையடுத்து, உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும் என ஏற்கெனவே நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் விஜயிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைப் பரிசீலித்த முதல்வர், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையுடன் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், கொடுங்காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.