கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ‘பெரியார் அறிவுலகத்தில்’ குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தனிப் பகுதியை ஒதுக்கி, அதில் TANCAM (தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம்) மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி MSME Nex-G கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
MSME Nex-G ஒருங்கிணைப்பாளரும், சின்னவேடம்பட்டி தொழிலதிபர்கள் சங்கத்தின் (CIA) தலைவருமான தேவக்குமார் தலைமையில் பல்வேறு தொழில்துறை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்த மனுவைச் சமர்ப்பித்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள் & சிறப்பம்சங்கள்:
-
5 மற்றும் 6-வது தளங்கள் ஒதுக்கீடு: பெரியார் அறிவுலகக் கட்டிடத்தின் 5 மற்றும் 6-வது தளங்களை MSME தொழில்துறைக்கு ஒதுக்கி, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
-
பொறியியல் புத்தகங்கள்: அறிவுலக நூலகத்தில் பொறியியல் துறை சார்ந்த புத்தகங்களை அதிகளவில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
-
செயல்முறைப் பயிற்சி & ஆராய்ச்சி: இதன் மூலம் கோவையில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் பெரிதும் பயன்பெறுவர். மாணவர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான நேரடிப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதோடு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவனங்களுடன் இணைக்கும் வாய்ப்பும் உருவாகும்.
-
மேலாண்மைக் கல்வி: மேலாண்மைப் படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் தொழில்முறை சார்ந்த நேரடி அனுபவங்கள் கிடைக்க வழிவகுக்கும்.
மேலும், சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகங்கள் தொடர்பாக எழுந்த தேவையற்ற சர்ச்சைகள் குறித்த செய்திகள் வருத்தமளிப்பதாகத் தெரிவித்த கூட்டமைப்பினர், இக்கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாகக் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



Leave a Reply