,

வெற்றி மடிக்கணினித் திட்டம்: யார் யாருக்கெல்லாம் இலவச லேப்டாப்? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

Spread the love
தமிழக அரசின் ‘வெற்றி மடிக்கணினித் திட்டத்தின்’ கீழ் இலவச மடிக்கணினி (Laptop) பெறத் தகுதியுடைய மாணவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாருக்கெல்லாம் இலவச லேப்டாப் கிடைக்கும்?
  • கல்லூரிப் படிப்புகள்: கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளக் கல்லூரி, வேளாண்மை மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள்.
  • ஆண்டுகள்: முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் இளநிலை (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணவர்கள்.
  • கூடுதல் சலுகை: கடந்த 2025-26 கல்வியாண்டில் இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் பயன் பெறாத மாணவர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பின் மூலம் லேப்டாப் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உயர் கல்விக்கும் டிஜிட்டல் கற்றலுக்கும் உதவும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.