முதல்வர் நாற்காலியில் விஜய்……

Spread the love

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்குச் சென்று தனது அலுவல் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அங்கிருந்து நேரடியாக தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அவரை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

தலைமைச் செயலக வளாகத்தில் விஜய்க்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் அறைக்குள் சென்ற அவர், முதலமைச்சருக்கான நாற்காலியில் அமர்ந்து முதல் அலுவல் கோப்புகளை பார்வையிட்டு பணிகளை தொடங்கினார்.

புதிய முதலமைச்சராக விஜய் அலுவல் பணிகளை தொடங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.