கோவையில் செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனை, கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கான கருத்தரிப்பு பாதுகாப்பு சேவைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
குடல்நோய், நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி வகித்து வரும் இந்த மருத்துவமனை, தற்போது “ஜெம் கருத்தரிப்பு மையம்” மற்றும் “கருத்தரிப்பு பாதுகாப்பு திட்டம்” ஆகியவற்றை தொடங்கி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இன்றைய காலத்தில் குழந்தைப்பேறு தாமதம் மற்றும் கருத்தரிக்க முடியாமை அதிகரித்து வரும் நிலையில், நவீன மருத்துவ முறைகளின் மூலம் தனிப்பட்ட சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளியின் உடல் நிலை, மரபியல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான சிகிச்சை முறைகள் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மையத்தில் தனிப்பயன் கருப்பைத் தூண்டுதல் திட்டங்கள், மேம்பட்ட கருவுறுப்பு தேர்வு முறைகள், வெளிப்படையான சிகிச்சை நடைமுறைகள் மற்றும் முந்தைய கருத் தரிப்பு சிகிச்சை தோல்வி வழக்குகளுக்கான சிறப்பு கவனம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், புற்றுநோய் சிகிச்சை பெறும் பெண்களின் எதிர்கால பெற்றோத்துவத்தை பாதுகாக்கும் வகையில் கருத்தரிப்பு பாதுகாப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கதிர்வீச்சு மற்றும் மருந்து சிகிச்சைகளால் பாதிக்கப்படக்கூடிய இனப்பெருக்க திறனை பாதுகாக்கும் நோக்கில், முட்டை உறைபதன முறைகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
புற்றுநோய் சிகிச்சை தாமதமின்றி தொடங்கும் வகையில் விரைவு மருத்துவ நடைமுறைகள், புற்றுநோய் நிபுணர் களுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் உலகத் தரத்திலான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெம் மருத்துவ மனையின் இந்த புதிய முயற்சி, புற்றுநோயிலிருந்து மீண்ட பின்னரும் பெற்றோராகும் கனவை நோயாளிகள் நனவாக்க உதவும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த மையம், எண்டோகைனகாலஜி துறை தலைவர் டாக்டர் கவிதா யோகினி தலைமையில் செயல்படுகிறது. டாக்டர் சாய் தர்ஷினி மற்றும் டாக்டர் சாத்வி பாலாஜி ஆகியோர் இணைந்து சிகிச்சை சேவைகளை வழிநடத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜெம் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவக் கல்வி நிகழ்ச்சியில், “அடினோமையோசிஸ் சிகிச்சை முறைகள்” குறித்த சிறப்பு உரையும் நடைபெற்றது. இதில் பல்வேறு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ அறிவுப் பகிர்வில் ஈடுபட்டனர்.
கோவை ஜெம் மருத்துவமனையில் கருத்தரிப்பு மற்றும் கருத்தரிப்பு பாதுகாப்பு சிகிச்சை மையம் தொடக்கம்



Leave a Reply