தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மருத்துவர்
இத்தாலியின் மிலான் நகரில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற உலக எண்டோஸ்கோப்பிக் இதய அறுவைச் சிகிச்சை மாநாட்டில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் மூத்த இதய மற்றும் மார்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்பிரசாத் எம்.எஸ். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
56 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற இம்மா
நாட்டில், நவீன எண்டோஸ் கோப்பிக் அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப் பட்டன.
மார்பெலும்பைப் பிளக்காமல், சிறிய கீறல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இச்சிகிச்சை முறையால் நோயாளிகளுக்கு வலி குறைவதுடன், விரைவில் குணமடையவும் வாய்ப் புள்ளது.
இந்தியாவில் குறைந்த துளையீட்டு இதய அறுவைச் சிகிச்சையை மேம்படுத்துவதிலும், மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் டாக்டர் ராம்பிரசாத் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
அவரது சர்வதேசப் பங்கேற்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும் கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
சர்வதேச இதய அறுவைச் சிகிச்சை மாநாட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பெருமை!



Leave a Reply