செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இசை நிகழ்ச்சி

Spread the love

கோவை மசக்காளிபாளையம் சாலை, லட்சுமிபுரம் விஸ்வநாதன் லேஅவுட்டில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்தவெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.– மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
இதனைத் தொடர்ந்து, மாலை 7 மணியளவில் கோவை லோகு வழங்கிய கீதம் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர்கள் லோகு, தாமரை செல்வி, கீதா, கார்த்திகை செல்வி, பிரகாஷ், விநாயகம், போத்தீஸ், பாஸ்கர், ராஜசேகர் உள்ளிட்டோர் பழைய மற்றும் புதிய திரைப்படப் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். பாடல்களுக்கு ஏற்ப ரசிகர்கள் உற்சாகத்துடன் ரசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை மாநகராட்சி 53-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.டி. மோகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் சின்னச்சாமி, தாமோதரன், உமாபதி, முரளி மோகன் உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.