முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து: 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு

Spread the love

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொறுப்பேற்ற உடனேயே மக்களுக்கு பல முக்கிய நலத்திட்டங்களை அறிவித்து தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.

அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப்பெண் படை” அமைக்கும் திட்டத்திற்கும் முதலமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சிறப்பு படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி போதைப்பொருள் தடுப்பு படைகள் அமைக்க உத்தரவு பிறப்பித்து அதற்கும் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *