ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக கை சுகாதார தினம் 2026-ஐ முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறையின் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
“செயல் உயிர்களை காப்பாற்றும்” என்ற உலக ளாவிய கருப்பொருளை மையமாகக் கொண்டு நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், கை சுகாதாரத்தின் முக்கியத் துவம் குறித்து சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நோய் தடுப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பில் கை சுகாதாரம் முக்கிய பங்கு வகிப்பதாக வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனை வளாகம் முழுவதும் க்யூஆர் குறியீடுகள் பொருத்தப்பட்டு, அவற்றை மொபைல் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் கை சுகாதாரம் குறித்த விளக்கங்கள், வழிகாட்டிகள் மற்றும் காணொளி தகவல்கள் வழங்கப்பட்டன. இந்த டிஜிட்டல் முறையால் மக்கள் எளிதில் தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரு மளவில் பங்கேற்று, நோய் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை தொடர்ந்து கடைப் பிடிப்போம் என உறுதி எடுத்தனர்.
சமூக நலனில் அக்கறை கொண்டு இவ்வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொட ர்ந்து நடத்தி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *