கோவையில் மனிதநேய தொழிற்சங்கம் சார்பில் மே தினக் கொண்டாட்டம்

Spread the love

மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தொழில் சங்க பிரிவான மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் கோவை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட தொழிற்சங்க கிளைகளில் மனிதநேய தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
உழைப்பாளர்களை முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் இன்றைய தினம் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் நலன் காக்கவும் நிலை உயர்ந்திடவும் என்றென்றும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்களை மாநில செயலாளர் சாகுல் ஹமீது தெரிவித்தார்
கோவை மத்திய மாவட்ட மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் சாகுல் அமீது
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சர்புதீன் , மாவட்ட செயலாளர் முகமது இப்ராகிம் ஆகியோர்கள் தொழிற்சங்க கொடியினை ஏற்றினர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முனிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் அசாருதீன், துணைத் தலைவர் TMS அப்பாஸ், துணைச் செயலாளர் நூர்தின், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் இப்ராஹிம் , ஊடகப் பிரிவு ஜுபைர் மற்றும் தொழிற்சங்க கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வினை மனிதநேய தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அபுதாகிர் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்.