தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டிய நேரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நடைமுறை, தபால் ஓட்டுகள் மற்றும் செல்லாத ஓட்டுகள் எவ்வாறு கையாளப்படும் என்பன குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
வாக்கு எண்ணிக்கை செயல்முறை சீராகவும் வெளிப்படையாகவும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு – கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ஆட்சியர்



Leave a Reply