செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் ‘டெய்சி’ விருது திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற டெய்சி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த விருது திட்டத்தை ராயல் கேர் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படுகிறது
மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறுகையில், “நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டுமெனில் முதலில் செவிலியர்களை அன்போடு கவனிக்க வேண்டும்” என்றார்.
செவிலியர் பிரிவு இயக்குநர் டாக்டர் சியாமளா குமார் பேசுகையில், “செவிலியர்களுக்கான ஒவ்வொரு முதலீடும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவர்களின் சேவையை அங்கீகரிப்பது உண்மையான அதிகாரமளித்தலாகும்” என்றார்.
தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம், “டெய்சி விருது போன்ற திட்டங்கள் செவிலியர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுவதோடு, நோயாளிகளின் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கொண்டாடுகின்றன” என்று தெரிவித்தார்.
டெய்சி விருது பெறும் செவிலியர்களுக்கு சர்வதேச அங்கீகார சான்றிதழ், சிறப்பு அடையாளப் பதக்கம் மற்றும் ‘தி ஹீலிங் டச்’ சிற்பம் வழங்கப்பட உள்ளது.
இந்த முயற்சியின் மூலம், ராயல் கேர் மருத்துவமனை செவிலியர் சேவையை கௌரவிக்கும் புதிய முன்னுதாரணத்தை இந்திய அளவில் உருவாக்கியுள்ளது.
ராயல் கேர் மருத்துவமனை சார்பில் செவிலியர்களுக்கான ‘டெய்சி’ சர்வதேச விருது



Leave a Reply