கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் – குமாரக்குடி சாலையில் பேரூர் மதுரா கூட்டாம்பள்ளி கிராமத்தின் குளக்கரையில் இராஜ. இரத்தினம் பிள்ளையால் கட்டப்பட்ட ஸ்ரீ இரத்தின விநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரம் முழங்க அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் அறங்காவலர்கள் ஆர்.அருள்பிரகாசம், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ராஜேந்திரன், கே.திருநாவுக்கரசு பிள்ளை கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சார்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply