காங்கிரஸ் கட்சியில் தான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தான் கூட்டணியில் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என பெற்றதாக காங்கிரஸ் மாநில தலைமை குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அண்மையில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு என்பது கருத்துக்கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும் மக்கள் முடிவு செய்து விட்டனர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார். திமுக 145 இடங்களில் இருந்து 165 இடங்கள் வரை வெற்றி பெறுவார்கள் என கருத்துக் கணிப்பில் கூறியிருப்பது கருத்து திணிப்பா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என முதலிலிருந்து சொல்லி வருகிறோம் என்பதால் அதை விட குறைந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் கருத்து திணிப்பு என்று சொல்லி வருகிறோம் அதே வேளையில் இன்னும் 24 மணி நேரத்தில் இருக்கிறது பார்ப்போம் என்றும் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகள் சிறப்பான பணி செய்துள்ளதாகவும் ராகுல் காந்தி பிரச்சாரம் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளதாகவும் கூறியதுடன் முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துள்ளதன் பயனாக அந்த பணி வீண் போகாது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் மக்கள் புரிதலோடு இருக்கிறார்கள் யார் ஆள வேண்டும் யார் ஆளக்கூடாது என்றும் தெரிந்திருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் எரிவாயி சிலிண்டர் விலை ஏற்றி விடுவார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தலைமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு சிலர் மனக்குமுரலோடு பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் நேர்மை இல்லாமல் போற போக்கில் பேசுவதற்கு நான் பதில் சொல்வதில்லை என்றும் கூறிய செல்வப்பெருந்தகை நான் இல்லாதபோது கூட்டனியில் 25 தொகுதிகள் முதலில் வாங்கினார்கள் ஆனால் தற்ப்பொது 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜசபா கூடுதலாக வாங்கி உள்ளோம்., இது அழிவு பாதையா எனவும் 100% நாடாளுமன்றத்தில் இருக்கிறதா இல்லையா என்றும் புதுச்சேரியில் பத்துக்கு பத்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்கோள் காட்டினார். தொடர்ந்து ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசியதாகவும் தான் மெத்த படித்தவன் அல்ல எனக்கு காதில் சரியாக விழவில்லை என்றும் கூறினார்.மேலும் தான் அரசு பள்ளியில் படித்தவன் எனவும் இந்தளவுக்கு பேசியதற்காக அதனை பாராட்ட வேண்டும் எனவும் நான் என்ன கான்வென்டில் படித்தேனா சிபிஎஸ்சியில் படித்தேனா எனவும் கேள்வி எழுப்பியதுடன், அரசு பள்ளியில் படித்த என்னை விமர்சனம் செய்வது என்றால் அவர்கள் மன நோயாளி என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சாடினார்.
மனக்குமுறலுக்கு பதில் சொல்ல முடியாது ஜோதிமணி கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதில்



Leave a Reply