தொண்டாமுத்தூர் மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பேன் – நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணத்தில் எஸ்.பி.வேலுமணி உறுதி

Spread the love

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்காவது முறையாகவும், தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட் டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி, தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதி அதிமுகவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சிகளில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும், ஆளுயர மாலைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும், இருசக்கர வாகன அணிவகுப்புகளுடனும் தொண்டர்கள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தின் அரசியல் சூழல் எவ்வாறு இருந்தாலும், தொண்டா முத்தூர் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். இதற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்றியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்றார்.
மேலும், “மக்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டமன்றத்தில் உங்கள் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். மக்கள் இந்த தேர்தலில் புதிய கட்சிக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொண்டா முத்தூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவமனை மேம்பாடு, ஆர்.டி.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுக் குடிநீர் திட்டம், சாலை வசதிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் மேம் பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரி சலை குறைக்கும் நடவடிக்கைகள் மேற ்கொள்ளப்பட்டதாகவும், கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“கோவை மாவட்டத் திற்கு தேவையான அனைத்து முக்கிய திட்ட ங்களும் எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, கோவை மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் தொடர்ந்து முன் வைப்பேன். எனக்கு வாக்களித்த அனை வருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணத்தின் போது காந்திபார்க், தெலுங்கு வீதி, இடையர் வீதி, ராமகிருஷ்ணாபுரம், பொன்னையராஜபுரம், பால்கம்பெனி, பி.எம்.சாமி காலனி, சுப்பிரமணியபுரம், விநாயகர் கோவில் வீதி, டி.சி.சாமி ரோடு, கண்ணுசாமி ரோடு, லைட்ஹவுஸ் ரோடு, அருணாச்சலம் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது மாவட்ட இணைச் செயலாளர் எஸ். மணிமேகலை,  பகுதி செயலாளர் சிகே.விஸ்வநாதன், பொறுப்பாளர்கள் ராஜா, சத்யபாமா,  இலக்கிய அணி மாவட்ட செயலாளர் டி.லட்சுமி காந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிகுமார், பாசறை மாவட்ட செயலாளர் பாசறை ராஜேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகி ரியாஸ், மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பாசறை சரவணன், சரவண பொஹ்ரா, பால் தங்கவேல், அஜூ, வீரமணி
வட்ட செயலாளர்கள் ஜி.தர்மராஜ்,  சாய் ஷியாம், டிகே.கண்ணையன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.