ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்டம், சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியை சார்ந்த 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, பொது மக்களின் மிகுந்த வெறுப்
புக்கு உள்ளானது.சமூக குற்றங்கள் நிகழபோதை பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது, மிக முக்கிய
காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்
களின் மீது பொது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்த
னர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற் கேற்ப்ப தற்போதைய இந்த
நிகழ்வு சான்றாக உள்ளது.
இந்நிகழ்வில் காவல்துறை
யால் கைது செய்யப்பட்ட வர்கள் உண்மை குற்றவாளி
களா? என்பதை உறுதி
படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்
துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்
தர வேண்டும்.பெண்கள், பெண் குழந்தைகள் பாது
காப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்
டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்
தில் புதியதாக பொறுப் பேற்றுள்ள முதலமைச்சர், வரும் காலங்களில் இது போன்ற சம்பங்களை தடுக்க,
போர் கால பாதுகாப்பு நடவ
டிக்கைகளையும், போதை பொருட்கள் நடமாட்
டத்தையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்
தினருக்கு விரைவில் நீதி
கிடைக்கவும், அக்குடும்பத் திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய்
1 கோடி வழங்க வேண்டும்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை


Leave a Reply