உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் நேரு நகர் லயன்ஸ் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, டாக்டர் ராஜேந்திரன் டயாபட்டிக் சென்டர், டாக்டர் தங்கதுரை கோல்டு டென்டல் மருத்துவமனை, விருக்ஷா அக்குபஞ்சர் அகடமி மற்றும் சந்திரமாரி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் காளப்பட்டியில் உள்ள சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
இதில் இலவச கண் மற்றும் விழித்திரை பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, அக்கு
பஞ்சர் சிகிச்சை மற்றும்
பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின் ‘தர்மம் செய்’ ஆண்டின் ஒரு பகுதியாக, ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆளுநர் PMJF P.S. செல்வராஜ், சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் சதீஷ்குமார், முதலாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால், இரண்டாம் துணை ஆளுநர் பாஸ்கர், நேரு நகர் நந்து (எ) பத்மநாபன், சங்கத்தின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் தன்யா, டாக்டர் சனா, மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, பல் மருத்துவர் டாக்டர் தங்கதுரை, டயாபட்டிக் மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன், அக்குபஞ்சர் மருத்துவர் டாக்டர் சுகுமார் ஆகியோர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ஜிஎஸ்டி ஒருங்கிணைப் பாளர் முத்துவேல், டயாபட்டிக் மாவட்டத் தலைவர் கர்ணன், மகளிர் தின மாவட்டத் தலைவர் சுப்பு செந்தில்குமார், வட்டாரத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நேரு
நகர் லயன்ஸ் சங்கத்
தலைவர் பொறியாளர் தேஜஸ்வினி, செய லாளர்கள் தாமிரா செந்தில்குமார், நடராஜ், பொருளாளர் உலகநாதன், ஜிஎம்டி உறுப்பினர்கள் பால்ராஜ், சிவகுமார், சௌந்தர்ராஜ், நல்லதம்பி, பாபு, கிரீஷ், ரமேஷ், ராதாகிருஷ்ணன், கமலேஷ் உள்ளிட்ட லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.
இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து பயனடைந்தனர்.
சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்!



Leave a Reply