மதியம் 2 மணியளவில் தேர்முட்டியில் தொடங்கிய தேர்த்திருவிழாவில், ஸ்ரீ ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியார் ஆகியோரின் மூல விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் எழுந்தருளி, ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி மற்றும் கருப்பகௌண்டர்வீதி வழியாக பவனி வந்து மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தது. மூல விக்கிரகங்களே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இவ்விழாவின் தனிச்சிறப்பாக அமைந்தது.
நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் மற்றும் தமிழக அமைச்சர்கள் வே. சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
தேர்ப்பவனியின்போது “ஜெய் ஜெகந்நாத்”, “ஹரே கிருஷ்ணா” என்ற பக்தி முழக்கங்கள் விண்ணை முட்டின. ஹரிநாம சங்கீர்த்தனம், பக்தி பஜனைகள், ஆன்மிக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. பகவானின் திருநாமங்களும் திருவுருவங்களும் இடம்பெற்ற பதாகைகளை ஏந்திய பக்தர்கள் மலர் மாலைகள் அணிந்து பக்தி உணர்வுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Reply